×

2020ல் தணிக்கைக்கு வந்த திரைப்படங்கள் குறைந்தது ஏன்?: தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: கொரோனா தொற்றினால் தணிக்கைக்கு வந்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிக குறைந்ததாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், ஒவ்வொரு ஆண்டும் சராசரி 20 ஆயிரம் திரைப்படங்களை திரைப்பட தணிக்கை குழு ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது.

ஆனால், கொரோனா தொற்றினால், 2020ம் ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களுக்கே சான்றிதழ் வழங்கப்பட்டன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018-19ல் 20,593 படங்கள் தணிக்கைக்கு வந்தன. 2020-21ல் அது 8,299 ஆக குறைந்தது. அதற்கு பின்னர் 2021-22ல் எண்ணிக்கை 12,719 என அதிகரித்தது. 2021-22ல் 18,070 என உயர்ந்துள்ளது. இதன் மூலம் திரைப்பட துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வருவதையே இது காட்டுகிறது என தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

The post 2020ல் தணிக்கைக்கு வந்த திரைப்படங்கள் குறைந்தது ஏன்?: தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ministry of Information and Broadcasting ,New Delhi ,Union… ,Dinakaran ,
× RELATED உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க...